குலதெய்வ கோயில் ...இரிச்சாரம்மாள்
அப்பாவுக்கு கடிதம்.....நாள் 9/10/2013
அப்பா நமது குலதெய்வம்
இரிச்சாரம்மாள் அவர்களுக்கு
சாத்தமங்களத்தில். கெங்கைஅம்மன் கோவிலுக்கு அருகில். பழைய சாமிகும்மிடும் இடம் அருகில். ராமலிங்கம் அவர்கள் கோயிலுக்கு அர்ப்பணித்த 3 செண்டு நிலத்தில்கோவில் கட்ட ஏற்பாடு நடந்துகொண்டு வருகிறது,
எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்.
தற்போது முதன்மை பீடம் கட்டி முடித்தாகிவிட்டது. கலசம் வைக்க விமானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அம்மன் சிலை மகாபலிபுரத்திலிருந்து எடுத்து வந்து தற்போது அதற்குரிய வேலைகள் நடந்து வருகிறது.
விநாயகர். முருகர், காத்தவராயன், பீடம், சிங்கம் ஆகிய சாமி சிலைகளும்
சேர்ந்து எடுத்து வந்துள்ளார்கள்.
அனைத்து சாமி சிலைகளும் 50,000 ரூபாய் அளவுக்கு நன்கொடைமூலம் பெறப்பட்டு கொடுக்கப்பட்டது.
பிரியாவும் ஞானசேகரும் லண்டனிலிருந்து 5000 ரூபாய் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன் மண்டபம் கட்டி யுள்ளார்கள்.
வரும் தைமாதம் கும்பாபிசேகம் செய்ய
ராமலிங்கம். சக்கரவர்த்தி. ரங்கசாமி. சேகர். குண்டுவீட்டு சுப்ரமணி. ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அம்பாள் கருணை என்றும் கிடைக்க நாங்கள் காத்துக்கொண்டுள்ளோம்.
உங்கள் ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறோம்.